» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நுங்கு சாப்பிடும் ஆசையில் பறிபோன இளைஞர் உயிர்

புதன் 15, மே 2019 6:56:49 PM (IST)

ஏர்வாடி அருகே நுங்கு சாப்பிடும் ஆசையில் மரத்தில் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

ஏர்வாடி அருகே டோனாவூரை சேர்ந்தவர் ஞானதுரை என்பவரது மகன் ஜான்சன் (25) வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இவர் நுங்கு சாப்பிடும் ஆசையில்  தனது நண்பருக்கு சொந்தமான தோட்டத்திலுள்ள பனை மரத்தில் ஏறினாராம். ஆனால் எதிர்பாரா விதமாக தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். 

உடனே அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து பிறகு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory