» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் தொடர்ந்து கொளுத்தும் வெயில் : பொதுமக்கள் அச்சம்

புதன் 15, மே 2019 7:52:15 PM (IST)

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தினசரி வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் வெயிலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தினசரி 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகலில் வெளியில் செல்லவே பொதுமக்கள் அஞ்சும் நிலை உள்ளது. மாலைக்கு பிறகே தங்கள் தேவைகளுக்காக வெளியில் வருகின்றனர். 

குறிப்பாக முதியவர்கள், ரத்தஅழுத்த நோய் உள்ளவர்கள் பகலில்  வெளியே வர அஞ்சுகின்றனர். கோடைமழை பெய்து சூட்டை தணிக்காதா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.குற்றால அருவிகளிலும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory