» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்ததால் காென்றேன் : கணவர் வாக்குமூலம்

புதன் 15, மே 2019 8:15:21 PM (IST)

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குடும்ப தகராறால் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

சங்கரன்கோவில் அடுத்த நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்த இவர், கடந்த 3 மாதங்களாக விடுமுறையில் சொந்த ஊரில் இருந்து வந்துள்ளார். கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாம். இன்று வழக்கம் போல் பிரச்சனை ஏற்பட்டு முற்றியுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கணவர், மனைவி வெள்ளைதுரைச்சியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். தடுக்க முயன்ற 16 வயது மகள் சிவரஞ்சனிக்கும் பலத்த வெட்டு காயம் விழுந்துள்ளன. இதையடுத்து புளியங்குடி காவல் நிலையத்தில் கணவர் சமுத்திரபாண்டி சரண் அடைந்தார். 

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, என்னுடைய மகள் சிவரஞ்சனி ஆட்டோ டிரைவரை காதலித்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைத்து விடுவோம் என எனது மனைவி கூறினார். சிவரஞ்சனியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைப்போம் என நான் கூறினேன். ஆனால் என் மனைவி கேட்காததால் கோபம் அடைந்த நான், மனைவியுடன் நடைபெற்ற வாக்குவாதத்தில் மனைவி அரிவாளால் வெட்டினேன். அவர் இறந்து விட்டார். நான் போலீசில் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:19:29 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory