» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பறவைகளிடமிருந்து பயிரைக் காக்க இயந்திரம் : தென்காசி விவசாயி புது முயற்சி

புதன் 15, மே 2019 8:41:22 PM (IST)

நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பறவைகளிடமிருந்து சோளத்தைப் பாதுகாக்க புதுமையான கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

தென்காசியைச் சேர்ந்த விவசாயி தங்கத்துரை.இவர் பறவைகளிடமிருந்து பயிரைக் காக்க புதுமையான இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். செயலிழந்த மின் விசிறியின் இறக்கையுடன் செயினை இணைத்து காற்று வீசும் திசையில் வைத்துள்ள அவர், அதனுடன் ஒரு தகர டப்பாவை இணைத்துள்ளார். காற்று வீசும் போது மின் விசிறியின் இறக்கைகள் சுழலும் போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள செயின் தகர டப்பாவில் பட்டு தொடர்ச்சியாக ஒலி எழுப்புகிறது.

இந்த சத்தத்தினால் பறவைகள் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கும் விவசாயி தங்கத்துரை, பறவைகளால் ஏற்படும் பயிர்சேதம் 80 சதவீதம் குறைந்துள்ளதாக கூறுகிறார். பத்தாம் வகுப்பை கூட தாண்டாத அவர், யூடியூப்பை பார்த்து இந்தக் கருவியைத் தயாரித்தாக கூறுவது அங்குள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory