» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எறும்புபொடி விழுந்த பிஸ்கட் தின்ற குழந்தை பலி

வியாழன் 16, மே 2019 10:27:17 AM (IST)

பாளையங்கோட்டை அருகே எறும்பு பொடி மீது விழுந்த பிஸ்கட்டை தின்ற குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மகள் அனலியா (2). மிக்கேல் வீட்டில் எறும்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக எறும்பு பொடி தூவியுள்ளனர். அதன் மீது பிஸ்கட் விழுந்ததாம். அதை அறியாமல் அந்த பிஸ்கட்டை எடுத்து தின்ற குழந்தை அனலியா, மயங்கி விழுந்துள்ளார்.  இதையடுத்து அவரை பாளை. ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை  சேர்த்தனர். இந்த நிலையில் அனலியாஉயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory