» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டை பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

வியாழன் 16, மே 2019 10:49:57 AM (IST)

பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் (விநியோகம்) முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில்  சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. அதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வி.எம்.சத்திரம்,  கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர்,  நீதிமன்ற பகுதி, சாந்தி நகர், சமாதானபுரம்,  அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்க்கெட்,  திருச்செந்தூர் சாலை,  பாளையங்கோட்டை பேருந்து நிலையம்,  மகாராஜநகர்,  தியாகராஜநகர்,  ராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது. 

இதேபோல் சிவந்திப்பட்டி, அன்புநகர், பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory