» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பேர் பரிதாப பலி

வியாழன் 16, மே 2019 11:23:02 AM (IST)

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில்  இருவர் இறந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். 

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வரகனூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்நிலையில், மாங்குடி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் கோபால் (21),  நடராஜன் மகன் காளிராஜ் (46),  பாலகுரு மகன் அர்ஜுன் (16), முத்தையா மகன் குருசாமி (62), காமராஜ்,  ராமையா மகன் குருசாமி (58) ஆகிய 6 பேர், அந்தப் பட்டாசு ஆலை அருகே  சம்பவத்தன்று காலை விறகு வெட்டச் சென்று, அங்கேயே உணவு சமைத்தனராம்.

அப்போது, அந்தப் பட்டாசு ஆலையின் ஓர் அறையில் வெடிமருந்துகள் இருந்ததாகவும், அனல் காற்றால் ஏற்பட்ட கடும் வெப்பத்தால், வெடிமருந்துகள் வெடித்து எரியத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதில், 6 பேரும் தீக்காயமடைந்தனர். தகவலின்பேரில் வெம்பக்கோட்டைத் தீயணைப்பு நிலையத்தினர் சென்று, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

சங்கரன்கோவில் டி.எஸ்.பி. ராஜேந்திரன், திருவேங்கடம் வட்டாட்சியர் பாஸ்கரன், அதிகாரிகள் சென்று, காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கோபால்,குருசாமி ஆகியோர் இறந்தனர். இதுதொடர்பாக திருவேங்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory