» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாநகரத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

வியாழன் 16, மே 2019 12:12:36 PM (IST)

திருநெல்வேலி மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகர பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேட்டை வழியாக திருநெல்வேலி காட்சி மண்டபம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.  இந்த நிலையில் காட்சி மண்டபம் முதல் கல்லணை பள்ளி, அருணகிரி திரையரங்கு வழியாக திருநெல்வேலி நகரில் உள்ள ஆர்ச் வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து திருநெல்வேலி மாநகரில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 

அதன்படி, பேட்டை, சேரன்மகாதேவி, முக்கூடல், கடையம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஆகியவை நெல்லையப்பர் கோயில், வாகையடி முனை, சந்திப்பிள்ளையார் கோயில், காட்சி மண்டபம் வழியாக செல்லும். அதேநேரத்தில் தென்காசி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வண்ணார் பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி, பழையபேட்டை வழியாக செல்லும். போக்குவரத்து மாற்றம் தொடர்பாக வண்ணார்பேட்டை, திருநெல்வேலி ஆர்ச் பகுதியில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. தென்காசி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கண்டியப்பேரி குளம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்கு சாலையில் இருந்த மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.  வழக்கமாக கண்டியப்பேரி குளக்கரை சாலை வழியாக ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory