» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை சட்டக்கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

வியாழன் 16, மே 2019 1:07:38 PM (IST)

நெல்லை சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகம் இன்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து நெல்லை சட்டக் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் விண்ணப்பங்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு 5 ஆண்டு சட்ட படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று விநியோகிக்கப்படுகிறது.

இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை விண்ணப்பங்களை கல்லூரியிலும் ஆன்லைன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். 

பின்னர் சாதிவாரியான கவுன்சிலிங் மூன்று கட்டமாக நடைபெறும். தொடர்ந்து 4-வது கட்ட கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் விளையாட்டு வீரர்களுக்கு நடைபெறும். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 411 இடங்கள் உள்ளன. அதில் நெல்லை கல்லூரியில் 160 இடங்கள் உள்ளது. ஜூலை கடைசி தேதியில் கல்லூரி வகுப்புகள் ஆரம்பம் ஆகும். அதை தொடர்ந்து 3 ஆண்டு படிப்புகளுக்கான விண்ணப்பம் ஜூன் 28 அன்று தொடங்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory