» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பஞ்சுமெத்தை கம்பெனியில் இரவு திடீர் தீ விபத்து

வியாழன் 16, மே 2019 5:42:00 PM (IST)

செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பகுதியில் உள்ள பஞ்சுமெத்தை கம்பெனியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு சொந்தமான பஞ்சுமெத்தை தயாரிக்கும் கம்பெனி அந்த பகுதியில் உள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளிலும் தீப்பற்றி எரிந்தது.அதனை பார்த்த பொது மக்கள் உடனடியாக செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ வபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory