» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் : மாவட்டஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 16, மே 2019 6:54:02 PM (IST)

திருநெல்வேலியில் டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் மூடப்பட்டுவதாக மாவட்டஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், திருநெல்வேலி நகரில் 18.05.2019 அன்று குறுக்குத்துறை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் நடைபெற இருப்பதால், மேற்படி குறுக்குத்துறை முருகன் கோவில் அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை எண்.10912  மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடத்திற்கு  விடுமுறை அளிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாகம் நடத்தி வரும் மேற்கண்ட மதுபானக்கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடம்; ஆகியவை  18.05.2019 (சனிக்கிழமை) அன்று மூடப்பட்டு இருக்கும்.  மேற்படி உரிமத்தலத்தில் மதுபானங்கள் விற்பனை கிடையாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

மேலும், மேற்படி நாளில் திருக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக எவ்விடத்திலும் மதுபானங்கள் விற்பனை மற்றும் மதுபானங்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory