» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி

சனி 18, மே 2019 11:03:33 AM (IST)திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பேருந்து மோட்டார்பைக் மோதிய விபத்தில் இருவர் பலியானார்கள். 

வள்ளியூரில் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி அடுத்த சவளக்காரன் குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (55) இவர் மும்பையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சொந்த ஊரில் உள்ள கோவில் கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். 

பின்னர் முருகேசன் நேற்று காலையில் வள்ளியூரில் நடந்த உறவினரின் திருமண விழாவிற்கு சென்றார். அப்போது அவருடன் அதே ஊரைச் சேர்ந்த உறவினர்களான முத்து மகன் கண்ணன் (38) கோபாலகிருஷ்ணன்  (50) ஆகியோரும் திருமணத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதியம் முருகேசன், கண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார்பைக்கில் தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். 

நான்குவழிச்சாலையில் கேசவன் ஏரி சந்திப்பு பகுதியில் சென்றபோது நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசு விரைவு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார்பைக் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் கண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். மோதிய வேகத்தில் பேருந்தின் அடியில் மோட்டார்பைக் சிக்கியது. 

இது குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உதவி ஆய்வாளர் ஒன்று மற்றும் காவலர்கள் விரைந்து வந்து மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த முருகேசன், கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

அப்போது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கோபாலகிருஷ்ணனை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து டிரைவரான நாகர்கோவில் குருசடியைச் சேர்ந்த மோகன்தாஸை கைது செய்தனர். 

விபத்தில் இறந்த முருகேசனுக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். விபத்தில் இறந்த கண்ணனுக்கு வேலம்மாள் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். வள்ளியூரில் திருமணத்துக்கு சென்ற உறவினர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory