» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருவேங்கடம் வெடி விபத்தில் மேலும் ஒருவர் பலி

சனி 18, மே 2019 11:59:35 AM (IST)

திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே வரகனூரில் ஏற்கெனவே வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை அருகே தனியார் நிலத்தில் கருவேல மரங்களை வெட்டும் பணி கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது.  அங்கு சமையல் செய்தபோது,  காற்றில் தீப்பொறி பரவி, சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலை அறையில் விழுந்ததில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.  

இதில், கோபால், குருசாமி  ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாங்குடியைச் சேர்ந்த கனகராஜ் (46) என்பவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.   இதையடுத்து வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory