» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சூறை காற்றுடன் மழை 2 ஆயிரம் வாழைகள் சேதம்

சனி 18, மே 2019 12:35:18 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் களக்காட்டில் 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது. இதனால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து வருவதால் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதில் திடீரென வீசிய சூறாவளி காற்று காரணமாக பாளை சாந்திநகர் பகுதியில் ஏராளமான மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. 

களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீர் என இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டியது. மழையின் போது சூறை காற்றும் வீசியது. இந்த சூறை காற்றினால் களக்காடு அருகே சிதம்பரபுரம் பழங்குளத்து பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory