» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு : மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

சனி 18, மே 2019 1:30:17 PM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருடப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லையை அடுத்த சுத்தமல்லி கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் ஆனந்த் (36). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றாராம்.இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஆனந்தின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், வீட்டில் உள்ள பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

இந்த நிலையில் ஆனந்தின் சகோதரி விஜயா தனது சகோதரரின் வீட்டுக்கு வந்தார். அப்போது  வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர்ஆனந்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஆனந்த் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவின் பூட்டை உடைத்து, நகைகளை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory