» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

சனி 18, மே 2019 5:38:45 PM (IST)



குற்றாலத்தில் பெய்த கன மழையால் அருவிகளில் தண்ணீர் விழத்துவங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தென்காசி, குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று  மாலையில் தென்காசி, குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இரவு 8 மணி வரை மழை நீடித்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் மிக மெதுவாகச் சென்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பரிதவித்தனர்.

குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழத்துவங்கியது. இன்று காலையில் மெயின் அருவியில் விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு குளித்து மகிழ்ந்தனர். பகலில் வெப்பம் மிகுதியாக இருந்ததால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் நின்று குளித்தனர். தொடர்ந்து மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும். இல்லையேல் ஓரிரு நாட்களில் அருவிகளில் தண்ணீர் வரத்து நின்று விடும்.
இருப்பினும் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த இக்கன மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory