» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாக்கு எண்ணிக்கை சிறப்பாக நடைபெற வேண்டும் : திருநெல்வேலி ஆட்சியர் பேச்சு

சனி 18, மே 2019 6:42:16 PM (IST)
வாக்கு எண்ணிக்கை சிறப்பாக நடைபெற அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என வேட்பாளர் மற்றும் வேட்பாளர் முகவர்களுடான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்பாளர் மற்றும்  வேட்பாளர் முகவர்களுடான வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தலைமையில் இன்று (18.05.2019) நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-வேட்பாளர், தேர்தல் , முகவர் வாக்கு எண்ணும் முகவரை நியமனம் செய்யலாம். மேஜைக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் 14 மேஜைகளுக்கு தலா ஒரு நபர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு ஒரு நபர் வீதம் மொத்தம் 15 நபர்களை ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நியமனம் செய்யலாம். அங்கீரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் முகவர்கள், அங்கீரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் முகவர்கள், பிறமாநிலங்களில் அங்கீரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் முகவர்கள், பதிவு செய்யப்பட்ட , பதிவு செய்யபடாத அரசியல் கட்சி முகவர்கள், சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்களுக்கு இருக்கை ஏற்பாடுகள் செய்து தரப்படும். 

அரசு ஊழியரை முகவராக செய்திடகூடாது.வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகள் முதன் முதலாக எடுத்துக் கொள்ளப்பட்டு அலுவலர் மேஜையில் வைத்து எண்ணப்படும்.தபால் வாக்குகள் எண்ண ஆரம்பித்து 30நிமிடங்கள் கழித்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி கோட்டாச்சிதலைவர் மணிஷ் நாரணவரே ,சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட எஸ்பி., அருண்சக்திகுமார் , மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory