» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே சிறுமியிடம் வாலிபர் அத்துமீறல் : போலீஸ் விசாரணை

சனி 18, மே 2019 7:00:10 PM (IST)

நெல்லை அருகே சேர்ந்தமரத்தில் சிறுமியிடம் வாலிபர் அத்துமீறியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள தர்மத்தூரணி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த சுமார் 13 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினாராம். உடனே அவரது பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து போக்சோ கட்டத்தில் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory