» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அறிவியல் மையத்தில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி

சனி 18, மே 2019 7:12:55 PM (IST)

நெல்லை அறிவியல் மையத்தில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வரலாற்று அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது.

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியிலுள்ள அறிவியல் மையத்தில் வரலாற்று அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை மனோ பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தொடங்கி வைத்தார். மாவட்ட அறிவியல் மைய அதிகாரி முத்துக்குமார் முன்னிலை வகித்தார். 

கண்காட்சியில் நாணயம் சேகரிப்போர் மற்றும் பொதுமக்கள் ஸ்டால்கள் அமைத்து இருந்தனர். அதில் 50 வருடங்களுக்கு முந்தைய பழங்கால பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பழைய நாணயங்கள், கேமரா, ரேடியோ உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி இன்று தொடங்கி நாளை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory