» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேருந்து கட்டணம் உயர்வு காரணமாக பயணிகள் அவதி

சனி 18, மே 2019 7:50:02 PM (IST)

திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம் வழியாக  சுரண்டை , தென்காசி, செங்கோட்டை வழித்தட பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பல லட்சக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட தலைநகரான திருநெல்வேலிக்கு அரசு அலுவல்கள், வியாபாரம், கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் பல்லாயிரக்கணக்கில் சென்று வருகின்றனர். பொதுமக்கள் எளிதில் சென்று வர அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலானவைகள் காலாவதியான நிலையில் ஓட்டை உடைசலான நிலையில் உள்ளது. ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு பஸ் கட்டணம் தாறுமாறாக உயர்ந்த நிலையில் உடைந்த பஸ்களை எல்எஸ்எஸ், எஸ்எம்எஸ், ஓன்டூஓன், பாயிண்ட் டூ பாயிண்ட், எக்ஸ்பிரஸ், பைபாஸ் ரைடர், நான்ஸ்டாப், என்ற பெயரில் பல ரகங்களில் கட்டணங்களை உயர்த்தி தனியார்பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தி வசூலிக்க வழி காட்டியது. 

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி மார்க்கமாக ஓடும் அரசு பேருந்துகளில் அறிவிக்கப்படாத திடீர் கட்டண உயர்வு ரூ 5 வரை அதிகமாக்கி புகுத்தப்பட்டது. ஆலங்குளத்திற்க்கு ரூ 32லிருந்து 35 ஆகவும், வீகேபுதூருக்கு ரூ 40 விருந்து ரூ. 45 ஆகவும், சுரண்டைக்கு ரூ 46 லிருந்து 50 ஆகவும் தென்காசி ஓன் டூ ஓன் பஸ்ஸில் ரூ 65 ஆகவும் இதனால் வழக்கமான கட்டணத்தை கொண்டு வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்தனர். கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் வேறு வழியின்றி பயணித்தனர். காசு குறைவாக கொண்டு வந்த முதியவர்களுக்கு சில பெரிய மனம் படைத்தவர்கள் உதவினர். 

இது குறித்து போக்குவரத்து கழக தரப்பில் விசாரித்த போது திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் வேலை நடப்பதால் தச்சநல்லூர், ராமையன்பட்டி வழியாக செல்வதால் திருநெல்வேலியில் இருந்து திரும்பி செல்லும் போது மட்டும் ( ஒரு வழி பயணத்திற்கு) கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுவதாகவும் திருநெல்வேலிக்கு வரும் போது நடப்பு கட்டணமே வசூலிப்பதாகவும் கூறினர். பயணிகள் தரப்பில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவது என்பது  நிர்வாக வசதிக்காக எடுக்கப்படும் முடிவு அதற்க்காக கட்டணங்களை அதிகளவு கூட்டுவது ஏற்புடையது அல்ல ஏற்கனவே அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகளை விட அதிகளவில் கட்டணம் வசூலித்து மக்களை சிரமத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் பொதுமக்களை பாதிக்கும் இக் கட்டண உயர்வு பொதுமக்களை மேலும் பாதிக்கும். எனவே அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு வழி பயணத்திற்கு  உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory