» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா

சனி 18, மே 2019 8:06:28 PM (IST)பாவூர்சத்திரம் காமராஜர்நகரில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர்நகரில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு புருசசூத்த ஜெபம், மூலமந்த்ர ஹோமம், அனைத்து திரவியங்களால் அபிசேகம் மற்றும் கும்பாபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. 

பின்னர் மாலை 6 மணிக்கு சாயரக்சையும், 6.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா வருதலும், 8 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் குறும்பலாப்பேரி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory