» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடிபோதையில் விழுந்தவர் சாவு போலீஸ் விசாரணை

திங்கள் 20, மே 2019 10:19:23 AM (IST)

நெல்லை மாவட்டம் கீழச்சுரண்டையில் குடிபோதையில் விழுந்தவர் மரணமடைந்தார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கைக்கொண்டார்(35), டிரைவரான இவருக்கு கீழச்சுரண்டையில் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் கீழச்சுரண்டையில் மாமனார் கரடி மாடனுடன் வசித்து வருகிறார். கடுமையாக குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி குடித்து விட்டு விழுந்து கிடப்பாராம். 

அதே போல் சம்பவத்தன்று விழுந்து கிடந்த இவரை அக்கம்பக்கம் பார்த்த போது இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சுரண்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory