» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

களக்காடு அருகே தம்பதி மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை

செவ்வாய் 21, மே 2019 7:32:15 PM (IST)

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. 

களக்காடு அருகே கீழதுவரைகுளத்தை சேர்ந்தவர் மதியழகன் (29). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன் நின்று கொண்டிருக்கும் போது அங்கு அதே பகுதியினை சேர்ந்த ரவி மற்றும் 15 பேர் வந்துள்ளனர். தனது வீட்டின் முன் கூட்டமாக நிற்பதை பார்த்த மதயழகன் இது குறித்து கேட்டதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளளது. இதில் ரவி மற்றும் 15 பேர் சேர்ந்து மதியழகன் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory