» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தச்சநல்லூர், சிந்துபூந்துறையில் மின்தடை அறிவிப்பு

புதன் 22, மே 2019 10:38:46 AM (IST)

தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், தச்சநல்லூர், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 24) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் (விநியோகம்) முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் வருகிற வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதையடுத்து,  அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தச்சநல்லூர், பாலாஜி அவென்யூ, சிவன்கோயில் தெற்கு தெரு,  நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், சத்திரம் புதுக்குளம், பிராங்குளம், கோகுல் நகர், திருநெல்வேலி நகர சாலை, ஸ்ரீநகர், கிருஷ்ணாநகர், சேந்திமங்கலம், வடக்கு மற்றும்  தெற்கு பாலபாக்யா நகர், திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர்,  சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம்,  சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory