» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மோட்டார்பைக் விபத்து:தந்தை பலி; மகன் காயம்

புதன் 22, மே 2019 11:22:36 AM (IST)

பாளையங்கோட்டை அருகே மோட்டார்பைக்கிலிருந்து தவறிவிழுந்த முதியவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (65). இவரது மகன் அல்லல்  காத்தான் (22). இருவரும் நாங்குனேரியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு சம்பவத்தன்று மாலை பைக்கில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனராம். வாகனத்தை அல்லல்காத்தான் ஓட்டியுள்ளார். பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசி நகர் சீனிவாசநகர் அருகே வந்து கொண்டிருந்த போது பைக் நிலைதடுமாறி, இருவரும் கீழே விழுந்துள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே கணேசன் உயிரிழந்தார். அல்லல்காத்தானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory