» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டு வாசல் கதவு விழுந்து சிறுமி பரிதாப பலி

புதன் 22, மே 2019 12:13:48 PM (IST)

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வீட்டு வாசல் கதவு விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி மேலப்பாளையம் காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்த மஸ்தான் மகள் கமிலா (10).  இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் இரும்புக் கதவில் நின்று விளையாடிக்கொண்டிருந்தாராம். அப்போது அந்த கதவு இவர்மேல் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த கமிலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory