» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தும் வெயில்

புதன் 22, மே 2019 1:43:20 PM (IST)

திருநெல்வேலியில் தினசரி100 டிகிரிக்கு மேல் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. நெல்லையில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நெல்லையில் நேற்று அதிகபட்சமாக 103.1 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. 

இதனால் சைக்கிள், மோட்டார்பைக் ஆகியவற்றில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். சாலையில் நடந்த சென்ற பெண்கள் பலர் குடைபிடித்தப்படி சென்றனர். வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றின் விற்பனை அதிக அளவில் நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory