» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக்கில் வேகமாக வந்ததை கேட்டதில் தகராறு : 2 பேர் கைது

வெள்ளி 24, மே 2019 8:04:20 PM (IST)

அம்பாசமுத்திரத்தில் பைக்கில் வேகமாக வந்ததை தட்டி கேட்டதில் தகராறு காரணமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மாதாங்கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவர் அப்பகுதியில் பைக்கில் வேகமாக சென்றாராம். இதை பிரம்மநாயகம் (32) என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமான கார்த்திக் தனது பெற்றோருடன் பிரம்மநாயகத்திடம் தகராறில் ஈடுபட்டு அவரையும் அவரது மனைவியும் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த இருவரும் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக் மற்றும்  அவரது தகப்பனாரை கைது செய்தனர். அவரது தாயாரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory