» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாநகரில் 3,528 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

சனி 25, மே 2019 10:33:59 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் இதுவரை 3528 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  ரூ. 5 லட்சத்து 54 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும் சிறு மற்றும் குறு நிறுவனங்களை கண்காணிக்க மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமி,  8 கண்காணிப்பு குழுக்களை நியமித்துள்ளார். அக்குழுக்கள் மாநகராட்சியின் மண்டல பகுதிகளில் இயங்கும்  கடைகள்,  வணிக வளாகங்கள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், பூக்கடைகள், இறைச்சி கடைகள்,  பேருந்து நிலைய கடைகளில் தினந்தோறும் ஆய்வு செய்து வருகின்றன. 

சோதனையின்போது  இதுவரை 3,528 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  மேலும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தியவர்களுக்கு  ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory