» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் மாம்பழம் வரத்து அதிகரிப்பு

சனி 25, மே 2019 11:14:48 AM (IST)

திருநெல்வேலியிலுள்ள காய்கனி சந்தைகளுக்கு மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில்  மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான செங்கோட்டை, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி, களக்காடு ஆகிய பகுதிகளில் மாங்காய் உற்பத்தி அதிகம். பல்வேறு வகையான மாம்பழங்கள் ரூ. 40 முதல் ரூ. 100 வரை விற்பனையாகின்றன.இதுதவிர சேலம், தேனி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாம்பழங்கள் திருநெல்வேலி மாவட்டத்துக்கு விற்பனைக்காக வந்துள்ளன. 

நீல ரகம் கிலோ ரூ. 40-க்கும்,  இமாம் பசந்த் ரூ.100-க்கும்,  பஞ்சவர்ணம் ரூ. 70-க்கும், சப்பட்டை ரூ. 50-க்கும், பாலாமணி ரூ. 50-க்கும், பங்கனப்பள்ளி ரூ. 80-க்கும் விற்பனையாகின்றன.  இதுதவிர கிளிமூக்கு எனப்படும் நாட்டு மாம்பழங்கள் கிலோ ரூ. 25 முதல் கிடைக்கின்றன. தற்போது மாம்பழ வரத்து அதிகரித்து காணப்படுவதால் விலை சற்று குறைந்துள்ளது.  இதனால் மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory