» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மினிலாரி-மோட்டார்பைக் மோதல் இளைஞர் பலி

சனி 25, மே 2019 11:35:41 AM (IST)

சேரன்மாதேவி அருகே மினிலாரியும், மோட்டார்பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது 2-வது மகன் பாலன் ( 25). பொறியாளரான இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.சம்பவத்தன்று காலைபைக்கில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பத்தமடை பேருந்துநிலையம் அருகே சென்றபோது எதிரே நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி வந்த மினிலாரி மோதியதில், பைக்கில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலைப்பகுதி மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஹகிரவுண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை பாலன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory