» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை

சனி 25, மே 2019 12:13:03 PM (IST)

பாவூர்சத்திரத்தில் பெற்றோர் திட்டியதால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். 

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் நகரை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் செல்வி (18). இவர் பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் செல்வியை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி சம்பவத்தன்று விஷம் குடித்துள்ளார். இதை பார்த்த பெற்றோர் அவரை உடனே பாளை., அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory