» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேன் நிலைதடுமாறிய விபத்து இளைஞர் பரிதாப பலி

சனி 25, மே 2019 12:49:27 PM (IST)

பாபநாசம் அருகே வேன் நிலைதடுமாறிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கயத்தாறு அருகேயுள்ள அய்யனாரூத்து பகுதியினை சேர்ந்தவர் கொம்பையா (35). கொத்தனாராக பணி செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் பாபநாசம் சொரிமுத்தையனார் கோவிலுக்கு வேனில் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தாராம். அப்போது லோயர்டேம் அருகே ஒரு திருப்பத்தில் வேன் திடீரென நிலை தடுமாறியதில் கொம்பையா தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். 

உடனே அவரது குடும்பத்தினர் கொம்பையாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைகாக பாளை., அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விகே புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory