» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடையநல்லூரில் பிரம்மாண்டமான ரம்ஜான் தொழுகை : 10,000 பேர் பங்கேற்பு

புதன் 5, ஜூன் 2019 12:21:58 PM (IST)




கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10,000 க்கும் அதிகமானோர்  கலந்து கொண்டனர். 

ரமலான் பிறை 29 நாட்கள் முடிந்ததை அடுத்து ஷவ்வால் பிறை வானில் தெரிந்ததை தொடர்ந்து கடையநல்லூரில்  தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது.இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத்திடல் முழுவதும் நிறைந்தது. அதன் பின்னர் அருகே உள்ள  பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர். இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் வளைகுடா மண்டல தலைவர் முகம்மநு நாஸிர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை  நடத்தினார்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகள் ஷாகுல்கமீது, ஹாஜாதீன், ஹைதர் அலி, அப்துல் பாசித், செய்யது மசூது  மாவட்ட செயலாளர் அய்யூப்கான்,   பஜார் கிளை தலைவர்  குறிச்சி சுலைமான், ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில்  தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்

இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில்  அப்துல் அஜீஸ்,  ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் காராஸ்மைதீன், மக்காநகர்  8வது தெரு தவ்ஹீத் திடலில் முகம்மது தாஹா, தவ்ஹீத்  நகர் அல் ஹிதாயா திடலில்  ஹாமித் , இக்பால் நகர் தெப்பதிடலில் குல்லிஅலி ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

அதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் ,வடகரை, வீரணம் ,சங்கரன்கோவில் , புளியன்குடி ,வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும்  30 க்கும் மேற்பட்ட ஊர்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சக்திலேல் தலைமையில் காவல்ஆய்வாளர் கோவிந்தன்  ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory