» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரிவாள் வெட்டில் படு காயமடைந்த பெண் சாவு

புதன் 5, ஜூன் 2019 1:05:11 PM (IST)

பாளையில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பாளை சமாதானபுரம் எம்கேபி நகர் ஆசாத் தெருவை சேர்ந்தவர் பரமானந்தம். இவரது மனைவி புஷ்பமணி(80). இவர்களது மகள் விஜயா(50). பரமானந்தம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். விஜயாவுக்கும் திருமணம் முடியவில்லை. இதையடுத்து தாய் மகள் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தங்கப்பாண்டி மகன் சர்ச்சில் சாம்ராஜ் (38). 

இவர்களிடையே வீட்டின் முன் வாகனத்தை நிறுத்துவதில் தகராறு இருந்து வந்ததாம். கடந்த 30 ஆம் தேதி சாம்ராஜ் வீட்டின் முன் வாகனத்தை நிறுத்திய போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சாம்ராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தாய் மகள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த புஷ்பமணி மற்றும் விஜயா சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இச்சம்பவம் குறித்து பாளை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து சாம்ராஜை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு புஷ்பமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory