» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து

புதன் 5, ஜூன் 2019 7:31:59 PM (IST)

செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ்  ரயிலில் திடீரென்று தீப்பிடித்தது.  தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவில் சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ்  ரயில் புறப்பட்டது. இந்த ரெயில் திருச்சி, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் வழியாக நேற்று காலையில் தென்காசிக்கு வந்தது. இந்த ரெயிலை அழகிரி, செய்யது சுலைமான் ஆகியோர் இயக்கினர். தென்காசியில் ஏராளமான பயணிகள் இறங்கியதால்  ரயிலில் குறைந்த பயணிகளே செங்கோட்டைக்கு பயணம் செய்தனர்.

நேற்று காலை 8.30 மணிக்கு ரயில் செங்கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள மெதுவாக சென்று கொண்டு இருந்தது. அப்போது, ரயில் போக்குவரத்திற்காக தண்டவாள பாதை மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் 2-வது இன்ஜின் பிரேக் பிடிக்கும் பகுதியில் திடீரென்று உராய்வு ஏற்பட்டு, தீப்பிடித்தது. அதன் அருகில் டீசல் டேங்க் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ரெயில் டிரைவர்கள், ரயில்வே ஊழியர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் ஸ்பிரே உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் தீயை அணைத்தனர். பின்னர் ரெயில் டிரைவர்கள் மெதுவாக ரெயிலை இயக்கி செங்கோட்டை ரெயில் நிலையம் கொண்டு வந்து சேர்த்தனர். பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory