» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் முதல் அணுஉலை மீண்டும் நிறுத்தம்

புதன் 5, ஜூன் 2019 7:46:13 PM (IST)

மின் உற்பத்தி தொடங்கிய 17 நாளில் கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைகள் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும், எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காகவும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடந்தன.

தொடர்ந்து முதலாவது அணு உலையில் கடந்த மாதம் 18-ந் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர் அங்கு மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 970 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் மின் உற்பத்தி தொடங்கி 17 நாட்களிலேயே மீண்டும் நேற்று மதியம் 12.30 மணிக்கு முதலாவது அணு உலையில் உள்ள வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக, அங்கு மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.இதையடுத்து அந்த பழுதை சரி செய்யும் பணியில் அணுமின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர். அங்கு விரைவில் பழுதை சரி செய்து, இன்னும் ஓரிரு நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory