» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி அருகே தாய், மகன் மீது தாக்குதல் : 5 பேருக்கு வலை

புதன் 5, ஜூன் 2019 8:11:38 PM (IST)

திருநெல்வேலி அருகே தாய், மகன் மீது தாக்குதல் நடத்தியதாக 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி தச்சநல்லுார் பகுதியில் வசித்து வருபவர் வேலுமயில் மகன் மகராஜன் (37).கான்டிராக்டரான இவர் அப்பகுதியில் உள்ள துரை என்பவரிடம் 2013ம் வருடம் ரூ. 12 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். இதில் ரூ. 8 லட்சத்தை திரும்ப செலுத்தி விட்டார் என்றும் பாக்கி பணத்தை திரும்ப செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் மகராஜனிடம் பணத்தினை திரும்ப கேட்டார்களாம்.  அப்போது ஏற்பட்ட தகராறில் மகராஜன் மற்றும் அவரது தாயை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் தச்சை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory