» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புளியரையில் ரூ 3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் : போலீசார் அதிரடி

வியாழன் 6, ஜூன் 2019 10:43:41 AM (IST)

புளியரையில் ரூ 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் புளியரை போலீசாருக்கு கேரளாவில் இருந்து காட்டுப் பகுதி வழியாக லாட்டரி சீட்டுகள் தமிழகத்திற்கு கடத்தி கொண்டு வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் தலைமையில் தனிப்படை ஏட்டு முத்துராஜ், காவலர்கள் சரவணா துரை, ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழக எல்லையான கோட்டைவாசல் மலை வழியாக காட்டுப்பகுதியில் ரெண்டு பேர் தமிழகத்திற்கு லாட்டரி சீட்டுகளை கடத்திக்கொண்டு வந்தனர். 

அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். போலீசாரிடம் பிடிபட்ட நபரிடம் சோதனை செய்தபோது அவரிடம் ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேரளா லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் பிடிபட்ட ஆசாமியிடம்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory