» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: மனுக்கள் அனுப்ப ஜூன் 20 கடைசி தேதி

வியாழன் 6, ஜூன் 2019 11:14:38 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஜூலை 5ஆம் தேதி நடைபெறவுள்ளதால், ஓய்வூதியர்கள் தங்களின் குறை தொடர்பான மனுக்களை வரும் 20ஆம் தேதிக்குள் அனுப்புமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, திருநெல்வேலி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ளது.  இம்மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் (அரசின் நேரடி துறையில் பணிபுரிந்தவர்கள் மட்டும்) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு அதற்கான பலன்கள் கிடைக்கப் பெறாமல் நிலுவையாக இருப்பின், தங்களுடைய குறைகளை தெரிவித்து முழு முகவரியுடன் விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அதனுடன், இறுதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகம், கோரிக்கை நிலுவையில் உள்ள அலுவலகம், அலுவலக மின் அஞ்சல் முகவரி, ஓய்வூதிய எண் குறிப்பிட்டுள்ள ஆணை நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு,  துறை அலுவலர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 5ஆம் தேதி  நடைபெறும் ஓய்வூதியர்  குறைதீர் கூட்டத்தின்போது மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். வரும் 20ஆம் தேதிக்குப் பிறகு வரும் மனுக்கள் பரிசீலிக்கப்படாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory