» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காட்டு யானைகள் அட்டகாசம்:மரங்கள், சோலார் மின்வேலி சேதம்

வியாழன் 6, ஜூன் 2019 12:41:57 PM (IST)

வடகரை பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து  அட்டகாசம் செய்ததில் தென்னை, மா மரங்கள் மற்றும் சோலார் மின் வேலிகள் சேதமடைந்தன.

செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில்,  வடகரை கிராமப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிலங்கள் உள்ளன. இதில்,  தென்னை, வாழை, மா, கத்தரி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர்.இப்பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா, வாழை சோலார் மின் வேலிகளை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த காட்டு யானைகள் கூட்டம் சென்னாபத்து ராயர்காடு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ஷேக்உசேன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில்  தென்னை, மா மரங்கள் மற்றும் மின்வேலிகளை சேதப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory