» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

யூனியன் வார்டுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு விவரம்

வியாழன் 6, ஜூன் 2019 1:39:11 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் யூனியனில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. அதில் 2 வார்டுகள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், ஒரு வார்டு தாழ்த்தப்பட்ட பொது பிரிவுக்கும், 7 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும், 7 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.பாப்பான்குளம், பொட்டல்புதூர் பகுதி 9-வது வார்டு, மேலஆம்பூர், கீழ ஆம்பூர் பகுதி 15-வது வார்டு ஆகியவை தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், வீராசமுத்திரம், மந்தியூர், கோவிந்தபேரி பகுதி 13-வது வார்டு தாழ்த்தப்பட்ட பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து பகுதி 1-வது வார்டு, கடையம் பெரும்பத்தில் ஒரு வார்டு, வெங்காடம்பட்டி பகுதியை உள்ளடக்கிய 2-வது வார்டு, சேர்வைகாரன்பட்டி பகுதி 6-வது வார்டு, மடத்தூர், ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்துகளில் ஒருசில வார்டுகள் மற்றும் தெற்குமடத்தூர் பகுதியை உள்ளடக்கிய 7-வது வார்டு, கடையம் பகுதி 11-வது வார்டு, திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம் பகுதி 12-வது வார்டு, கோவிந்தபேரி, தர்மபுரமடம், சிவசைலம் பகுதி 14-வது வார்டு ஆகிய 7 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.கடையநல்லூர் யூனியனில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகள் பெண்களுக்கும், ஒரு வார்டு தாழ்த்தப்பட்ட பொதுப்பிரிவுக்கும், 4 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

களக்காடு யூனியனில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் சீவலப்பேரி, கோவிலம்மாள்புரம் பகுதி 5-வது வார்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், சிங்கிகுளம், கீழகாடுவெட்டி பகுதி 2-வது வார்டு, மலையடிபுதூர், தளவாய்புரம் பகுதி 7-வது வார்டு, செங்காலகுறிச்சி, கோவிலம்மாள்புரம் பகுதி 8-வது வார்டு, புலியூர்குறிச்சி பகுதி 9-வது வார்டு ஆகிய 4 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இடையன்குளம், பத்மநேரி, தேவநல்லூர் பகுதி 1-வது வார்டு, தேவநல்லூர், கீழகருவேலங்குளம் பகுதி 3-வது வார்டு, கள்ளிகுளம், படலையார்குளம், கீழகாடுவெட்டி பகுதி 4-வது வார்டு, சூரங்குடி, கடம்போடு வாழ்வு, வடுகச்சிமதில் பகுதி 6-வது வார்டு ஆகிய 4 வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory