» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நிப்பாஹ் வைரஸ் தடுப்பது குறித்து ஆலாேசனை கூட்டம்

வியாழன் 6, ஜூன் 2019 7:14:19 PM (IST)
திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தலைமையில் நிப்பாஹ் வைரஸ் தடுப்பது குறித்து ஆலாேசனை கூட்டம் நடைபெற்றது.

நிப்பாஹ் வைரஸ் பொது சுகாதார முக்கியத்துவம் பெற்ற பரவிவரும் வைரஸ் தொற்று நோய் ஆகும். இந்த வைரஸ் ஆனது மனிதர்களின் மூளை, நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் ஆகியவற்றைத் தாக்கி நோய் உண்டாக்கும் தன்மை கொண்டது. நிப்பாஹ் வைரஸ் இந்தியா, வங்களாதேசம் ஆகிய நாடுகளில் மனிதர்களைத் தாக்கியுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் 2018 ஆம் ஆண்டும், இந்த ஆண்டும் இந்த நோய் பரவியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மனிதர்கள் ஏழு நாட்களுக்கு மேல்; காய்ச்சல், நிமோனியா காய்ச்சல், தொண்டைவலி, இருமல், தலைவலி, உடல்சோர்வு ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவனைகள் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தீவிர சிகிச்சை அளித்தல் மூலம் இறப்பைத் தவிர்க்க இயலும். திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இதற்கான தொண்டை சளிப்பரிசோதனை மையம் புனேவில் இயங்கி வருகிறது. 

பழங்களை நன்கு கழுவி உண்ணுதல், பறவைகள், அணில்கள் கடித்த பழங்களை உண்ணாமல் தவிர்த்தல், காய்கறிகளை நன்கு வேகவைத்து உண்ணுதல், வெளியில் சென்று வந்தால் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு திரவம் கொண்டு நன்கு கழுவுதல், தும்மல் மற்றும் இருமல் வரும் போது மூக்கு, வாய்களை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ளுதல் ஆகியவற்றால் நிப்பாஹ் வைரஸ் பரவுவதைத் தவிர்க்க முடியும். 

போதுமான மருத்துவ வசதிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. மேலும் இதற்கான பிரத்யேக மருத்துவக் குழு மற்றும் கால்நடை பராமரிப்புக்குழு செங்கோட்டை, கேரளா எல்லையில் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்பட்டு தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory