» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு : உறவினர்கள் போராட்டம்

வெள்ளி 7, ஜூன் 2019 10:33:24 AM (IST)

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே, டாக்டர் இல்லாமல் நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளியூர் அருகே வசித்து வரும் அகிலா என்பவர், திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் யாரும் அங்கு இல்லாததால், நர்ஸ்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களே அகிலாவிற்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் மூச்சுச் திணறலால் அக்குழந்தை இறந்தது. பின்னர் அகிலாவும் மூச்சுத்திணறால் உயிரிழந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த அகிலாவின் உறவினர்களும் பொதுமக்களும் மருத்துவமனை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் சளைக்காத அவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என வாதிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory