» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி : தமிழக முதல்வருக்கு விக்ரமராஜா நன்றி

வெள்ளி 7, ஜூன் 2019 11:04:50 AM (IST)தமிழகத்தில் 24 மணி நேரமும் வியாபார நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி அளித்த தமிழக அரசின் அரசாணை வரவேற்கத்தக்கது எனவும் இந்த அரசாணை மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமில்லாமல் தொடர்ந்து செயல்பட அரசு உத்தரவிட வேண்டும் என நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பேட்டியின் போது கூறினார்.

திருநெல்வேலியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 24 மணி நேரம் கடைகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசின் ஆணை வரவேற்கதக்கது. முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் எனவும் இந்த அரசாணை மூன்றாண்டுகளுக்கு மட்டுமில்லாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் சிறு வியாபாரிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி வியாபாரிகள் ஒத்துழைப்பளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் உற்பத்தி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கட்டுபாடுகளை விதிக்கவேண்டும் அதனைவிடுத்து வியாபாரிகளை மிரட்டி தடை செய்யபடாத பிளாஸ்டிக் பொருட்களையும் வியாபாரிகளிடம் இருந்து அள்ளிசெல்வது சட்ட விரோதமான செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் உள்நாட்டு குளிர்பானங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளோம். அந்த மனுவில் உள்நாட்டு குளிர்பான உற்பத்தியாளர்களை மின்சார செலவிற்கு அரசு மானியம் அளிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு 50 சதவித பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தான் தான் வெற்றிபெற்றுள்ளது எனவும் முழு வெற்றிக்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவேண்டும்.

பிளாஸ்டிக் உபயோகிக்கும் வணிகர்களுக்கு மட்டும் அபராதம் விதிக்காமல் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை அரசு செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.பேட்டியின்போது மாநில துணைத்தலைவர் டிபிவி வைகுண்ட ராஜா, மாவட்ட செயலாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர் விஜிஎஸ் கணேசன், பொருளாளர் கலைவாணன், தெற்கு மாவட்ட தலைவர் சின்னதுரை மற்றும் நயன் சிங் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory