» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

வெள்ளி 7, ஜூன் 2019 12:19:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் பரிதாபமாக பலியானார்.

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ளது அய்யாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சக்தி முப்புடாதி (24). இவர் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ரயில் தண்டவாளம் பகுதியில் நடந்து சென்ற இவர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியானார். இது குறித்து தென்காசி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் உடல் பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory