» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பல்லி இறந்து கிடந்தகுளிர்பானம் குடித்த பெண்கள் மயக்கம்

சனி 8, ஜூன் 2019 12:14:27 PM (IST)

திருநெல்வேலி  மூலைக்கரைப்பட்டி அருகே பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த தாய்-2 மகள்கள் மயக்கம் அடைந்தனர்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் நாடார் குடியிருப்பை சேர்ந்தவர் மாரியப்பன் (34), பொக்லைன் எந்திர டிரைவர். இவருடைய மனைவி முத்துலட்சுமி (29). இவர்களுடைய மகள்கள் பெபினா (7), பிருந்தா (5). இதில் பெபினா மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு, பிருந்தா அதே பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. படித்து வருகின்றனர்.முத்துலட்சுமி சம்பவத்தன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் குளிர்பானம் வாங்கினார். பின்னர் அதனை வீட்டிற்கு கொண்டு வந்து, குடித்தார். மேலும் தனது 2 மகள்களுக்கும் குடிக்க கொடுத்தார். பிருந்தா குளிர்பானத்தை குடித்தபோது அந்த பாட்டிலில் ஏதே பூச்சி கிடப்பதாக முத்துலட்சுமியிடம் கூறி உள்ளார். 

உடனே அவர் அந்த பாட்டிலை வாங்கி பார்த்தபோது அதில் பல்லி ஒன்று இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதற்கிடையே பெபினாவும், பிருந்தாவும் திடீரென மயங்கி விழுந்தனர். முத்துலட்சுமிக்கும் லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே முத்துலட்சுமி இதுகுறித்து மாரியப்பனிடம் தெரிவித்தார். அவர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory