» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ஆதீன பட்டாபிஷேக விழாவுக்கு எதிர்ப்பு போலீஸ் குவிப்பு

சனி 8, ஜூன் 2019 12:56:08 PM (IST)

திருநெல்வேலி நகரத்தில் ஆதீன பட்டாபிஷேக விழாவையொட்டி இருதரப்பினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் உருவாகும் சூழல்  ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

திருநெல்வேலி நகரத்தில் ஸ்ரீமத் பரசமய கோளரிநாதர் ஆதீனம் உள்ளது.  இந்த ஆதீனத்தின் 38ஆவது ஆதீனகர்த்தர் கடந்த ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். இதனால் 39 ஆவது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பட்டாபிஷேகம் மற்றும் மகுடம் சூட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

இதையொட்டி திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகர் கோயில் வளாகத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  பின்னர் மானூரில் உள்ள சிவாலயத்தில் வைத்து ஆதீனகர்த்தருக்கு மகுடம் சூட்டும் விழா நடைபெற்றது.அங்கிருந்து ஆதீனகர்த்தரும், பட்டாபிஷேக கமிட்டியினரும் திருநெல்வேலி நகரத்தில் உள்ள மடத்தின் அலுவலகம், கோயிலுக்கு வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆதீனகர்த்தர் தேர்வு செய்வதை நீதிமன்ற உத்தரவுகளின்படியே செய்ய வேண்டும். அதன்பின்புதான் கோயிலுக்குள் அனுமதிக்க முடியும் எனக் கூறினர்.  இதனால் இருதரப்பினரும் திரண்டதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்ததும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகர காவல் உதவி ஆணையர்கள் எஸ்கால், தீபு தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory