» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை. அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

சனி 8, ஜூன் 2019 1:51:27 PM (IST)

பாளை., அடுத்த பெருமாள்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடப்பட்டுள்ளது.

பெருமாள்புரம் அப்பல்லோ காலனியைச் சேர்ந்தவர் மெய்கண்ட முத்துஅய்யனார் (54). இவர், திருநெல்வேலி டவுனில் உரக்கடை வைத்துள்ளார்.இவருடைய மனைவி தென்காசியில் அரசு பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றார்களாம். பணியை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து மெய்கண்ட முத்துஅய்யனார் பெருமாள்புரம் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory