» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு : ஆட்சியர் ஆய்வு

சனி 8, ஜூன் 2019 5:40:21 PM (IST)
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் பணிகளுக்காக நடைபெற்று வரும் தேர்வினை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது-தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு 08.06.2019 மற்றும் 09.06.2019 ஆகிய இரண்டு தினங்கள் தேர்வு நடைபெறுகிறது. இன்று தகுதித் தேர்வு தாள்-1 மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில், 9144 நபர்கள் தேர்வு எழுத அனுமதி பெற்றனர். 8108 நபர்கள் மட்டும் தேர்வு எழுதுகின்றனர். 1036 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. 

மேலும், தேர்வு நடைபெறும் பொழுது தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்து தேர்வு மையங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின்  மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் 22 மையங்களிலும் உடற்கூறு ஆய்வு  செய்ய 22 ஆண் காவலர்கள் மற்றும் 22 பெண் காவலர்கள் சோதனை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வுகள் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் கனகராஜ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory